தகவல் - மொஹமட் றிஸ்வான் (ஆசிரியர்)
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மாணவர்களுக்கான (கடின பந்து) Cricket விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (16.03.2018) வெள்ளிக்கிழமை அதிபரின் தலைமையில் பாடசாலை அப்துல் மஜீட் மண்டபத்தில் ஆரம்பமானது.
இவ் உபகரணங்களை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் HMM ஹரீஸ் சேர் அவர்களும்,பாராளுமன்ற உறுப்பினர் MIM மன்சூர் அவர்களும் அதிபர் ACAM இஸ்மாயில் ,சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் MS.சஹூதுல் நஜீம் ஆகியோர் பாடசாலை மாணவர்கள் கையளித்தனர்.
இதனை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 15 விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.