அண்மையில் அம்பாறையில் இடம் பெற்ற சம்வத்தில் பேசு பொருளாக மாறிப் போன கொத்துரொட்டியில் கருத்தடை மாத்திரை என்ற விவகாரத்தின் உண்மை நிலையினை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அம்பாறையில் உள்ள குறித்த அந்த ஹோட்டலில் பரிமாறப்பட்ட உணவில் மாத்திரை இருக்கவில்லை அது வெறும் மாவுக்கட்டியே என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
மருந்து போடப்பட்டதாக குறிப்பிடப்பட்ட உணவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு அது அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தது அந்த ஆய்வின் முடிவிலேயே உணவில் மாத்திரை கலக்கப்படவில்லை அது வெறும் மாவுக்கட்டியே என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பான செய்தியினை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து காணலாம்.