தகவல் - முஹமட் றிஸ்வான் (ஆசிரியர்)
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் 2018ம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டரங்கில் இன்று 15.03.2018 (வியாழக்கிழமை) 8.00A.M ற்கு அதிபர் ACAM.இஸ்மாயில் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
இதில் அதிதிகளாக சம்மாந்துறை கோட்ட கல்விப் பணிப்பாளர் MA.சபூர்தம்பி சேர் ,சம்மாந்துறை வலய திட்டமிடல் பிரதிக்கல்விப் பணிப்பாளர் MHM ஜாபிர் சேர்,நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளர் AS.அஹமட் கியாஸ் சேர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் .
இந் நிகழ்வில் உளவளத்துணையாளர்களாக A.மனூஸ்,ALM.றிப்கான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.