உலகை ஆட்கொண்டு உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வரும் கொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மற்றுமொருவர் சவுதி அரேபியாவில் மரணமடைந்துள்ளார்.
சவுதி அரேபியாவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை இருவர் பலியாகியுள்ளனர்.
வளைகுடா நாடுகளிலும் ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு சவுதி அரேபியாவில் இதுவரை 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற வேளை 28 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.
கொரோனா தொற்றின் தீவிரத்தை தடுக்க சவுதி அரேபியால் தற்போது 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.