Ads Area

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,000-ஐ தாண்டியது!

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

சீனாவின் ஊஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. சீனாவில் இதுவரை 81,285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,287 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 683 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 7,503 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 74, 386 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 10,941 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65, 797 ஆகவும், உயிரிழப்பு 935 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 656 பேர் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 3,647 ஆக உயர்ந்துள்ளது. இந்த அளவு சீனாவை விட அதிகமாகும். ஸ்பெயினில் 49, 515 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் 27,0 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,077 ஆக அதிகரித்துள்ளதுஃபிரான்ஸில் 25, 233 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 1,331 பேர் உயிரிழந்துள்ளனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe