நூருல் ஹுதா உமர்
அம்பாரை மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வொன்று கடந்த சனிக்கிழமை (29) அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் முஹம்மட் றியாஸ், கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய் தடுப்புப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் நாகூர் ஆரிப், அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி செயலாளர், அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பறூஸா நக்பர், தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவரும் தலைமைப் பேராசிரியருமான கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் கருத்துரையாற்றினர்.
இச்செயலமர்வில் அம்பாரை மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் பிராந்திய ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
