தகவல் - சம்மாந்துறை அன்சார்.
அமீரக, சார்ஜாவில் அபு ஷகரா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக்கு கீழ் இந்திய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அமீரக செய்திகள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்டவர் இவர் கேரளா மாநிலம் இடுக்கியை அடுத்த கருணபுரம் பகுதியை சேர்ந்த விஷ்ணு (வயது-29) என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
குறித்த அந்த கட்டிடப் பகுதியில் சட்டவிரோத செயல்களின் ஈடுபட்டு வந்த நைஜீரிய நாட்டவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்ட விஷ்ணு அடித்து கொல்லப்பட்டு மாடியிலிருந்து துாக்கி வீசப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இருந்தும் அந்த இடத்திற்கு விஷ்னு ஏன் சென்றார் என்ற விடையம் தொடர்பில் இதுவரை எந்த தெளிவும் இல்லாமல் இருப்பதாகவும் விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

