Ads Area

மருதம் கலைக்கூடலின் ஏற்பாட்டில் ஐக்கிய காங்கிரஸினால் சாய்ந்தமருதில் நிவாரணப்பணி முன்னெடுப்பு.

நூருல் ஹுதா உமர்

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயணத்தடை காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த வசதிகுறைந்த பொதுமக்களுக்கு அரிசி பக்கட்டுக்கள் வழங்கும் நிகழ்வு இன்று (17) மாலை சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலாவின் தலைமையில் சாய்ந்தமருதில் நடைபெற்றது.

ஐக்கிய (உலமா) காங்கிரசின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஐக்கிய  காங்கிரசின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத், பொதுச்செயலாளர் ஸாஹித் முபாரக் உட்பட சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் நிர்வாகத்தினர் பலரும் கலந்து கொண்டு இந்நிவாரண உதவிகளை வழங்கி வைத்தனர். சுமார் 25 குடும்பமளவில் இவ்வுதவியில் பயன்பெற்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe