Ads Area

உடல் கட்டழகு போட்டியில் கல்முனை பிரதேசத்திற்கு மூன்று பதக்கங்கள்!!

2024 ஆண்டுக்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா தற்போது மட்டக்களப்பில் இடம்பெற்றிருந்தது. 


ஆண்களுக்கான உடல் கட்டழகு போட்டியில் கல்முனை பிரதேசத்தில் மூன்று பதக்கங்களை தம்வசப்படுத்தியுள்ளது.


இவ் விளையாட்டு விழாவில் 47 பேர் கலந்து கொண்டிருந்தனர் இவர்களில் ஆண்களுக்கான உடல் கட்டழகு போட்டியில் கல்முனை பிரதேசத்தில் இருந்து பங்கு பற்றி இரண்டு தங்க பதக்கங்களையும், ஒரு சில்வர் பதக்கம்  அடங்கலாக மூன்று பதக்கங்களை குட்டி ஜிம் பிட்னஸ் வெற்றியீட்டியுள்ளது.


இதில் கல்முனை பிரதேச சார்பில் நிமலன் 85 கிலோ எடைப்பிரிவில் போட்டியில் பங்குபற்றிய  தங்கப் பதக்கத்தையும்  பாகிம்  80 கிலோ எடைப்பிரிவு போட்டியில் பங்குபற்றி  தங்க பதக்கத்தையும்,  இகாப் 90 கிலோ எடைப்பிரிவு போட்டியில் பங்குபற்றி சில்வர் பதக்கத்தையும் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe