Ads Area

சாரணர் பயிற்சிப் பாசறையில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு சானறிதழ் வழங்கும் நிகழ்வு.

தகவல் - ஜலீல் ஜீ.

ஒரு நாள் சாரணர் பயிற்சிப் பாசறையில் பங்குபற்றிய சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று  19-04-2018 சம்மாந்துறை அல்-அஷ்ஹர் வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்றது.

சான்றிதழ் வழங்கும் இந் நிகழ்வுக்கு பிரதம அதிதி நீர்ப்பாசன பொறியியலாளர் நவாஸ் அவர்களும், மேலும் ஏனைய அதிதிகளாக -கோட்டக்கல்வி அதிகாரி- சபூர் தம்பி சார், வலய சாரண இணைப்பாளர் நஜ்ஜாஸ் சார், உதவி மாவட்ட சாரண ஆணையாளர்கள்- உதுமாலெவ்வை சார், றிபாஸ் சார், மாவட்ட ஆணையாளர் -ரவீந்திரன் சார் , சிரேஷ்ட ஊடகவியலாளர்-மருதூர் அன்சார், மாவட்ட சாரண பொறுப்பாசிரியர்-நஸ்ருல்லாஹ் ஆகியோரும் கலந்து  கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கி வைத்தனர்.

சாரண ஆணையாளர் ஜலீல் ஜீ தலைமையில்  நேற்று 18-04-2018 அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான ஒரு நாள் சாரணர் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது குறிப்பிடத் தக்கதாகும்.














Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe