சம்மாந்துறையில் இன்று ஒரு வீட்டில் உள்ள குடிநீர் குழாயினுாடாக பெறப்பட்ட நீரையே இப்போது நீங்கள் படத்தில் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
குறித்த வீட்டினர் இன்று காலை தங்களது வீட்டில் உள்ள குடிநீர் குழாயினுாடாக நீரைப் பெறும் போது அந்த நீர் குடிப்பதற்கு எந்தவிதத்திலும் சுத்தமில்லாதவாறு மிகவும் அழுக்காகவும், நிறம் மாறியும் காணப்பட்டதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
குடிநீர்க் குழாயினுாடாக இவ்வாறான விதத்தில் நீர் வருவது இன்று மட்டுமல்ல இந் நிகழ்வு அடிக்கடி நடைபெறுவதாகவும் கூறப்படுகின்றது.
அண்மைக்காலமாக சம்மாந்துறையில் கிட்னிப் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறான அசுத்தமான நீர் விநியோகமும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணும் என்பதில் ஐயமில்லை.
ஆகவே...தயவு செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பிரதேச சபையினர் இது விடையத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.