Ads Area

புனிதத் தளமான கோயில் அமைந்திருக்கும் வீரமுனை பிரதான வீதியின் அவலம்.

வீரமுனை பிரதான வீதியானது (கோயில் வீதி) குன்றும் குழியுமாக காணப்பட்டு மழைகாலங்களில் வடிகான்கள் நிரம்பு கின்றதோ இல்லையோ பிரதான வீதியானது நிரம்பி விடுகின்றது என அப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். புனிதத் தளமான கோயில் அமைந்திருக்கும் இவ் வீதியின் இத்தகைய நிலையானது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதை விட வேடிக்கையான விடயம் யாதெனில் இவ் பாதையில் பயணம் செய்யும் வாகனங்களின் பாகங்கள் களன்று விழுகின்ற அளவிற்கு மோசமாக காணப்படுகின்றது. 

இது சம்மந்தமாக முறைப்பாடு செய்தும் அதற்குரிய நடவடிக்கையினை வீதி அதிகார சபையினர் மேற்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே...தயவு செய்து சம்மாந்துறை பிரதேச சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது விடையத்தில் கவனம் செலுத்தி பாதசாரிகளை இன்னல்களில் இருந்து விடுவிக்கும் படி வேண்டப்படுகின்றீர்கள்.

செய்திக்கு நன்றி - வீரமுனை இணையத்தளம்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe