Ads Area

டாக்டர் அஸாத் எம் ஹனிபாவின் தம்பியார் கவிதை நூல் வெளியீட்டு விழா.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கவிஞர் டாக்டர் அஸாத் எம் ஹனிபா எழுதிய மூன்றாவது கவிதை நூலான தம்பியார் நூலின் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் (18) ஞாயிற்றுக் கிழமை காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பேராசிரியர் சபா ஜெயராசா கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக ஞானம் சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என். எம். அமீன், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளையின் தலைவர் செந்தில் வேலவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி வரவேற்புரை நிகழ்த்த,  நூலின் முதல் பிரதியை இலக்கிய புரவலர்  ஹாஷிம் உமர் பெற்றுக் கொண்டார். தம்பியார் நூலின் நயவுரையை சிரேஷ்ட எழுத்தாளரும் பன்னூலாசிரியருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் நிகழ்த்தியதோடு, காவ்யாபிமானி கலைவாதி கலீல் கவி வாழ்த்து பாடினார். வசந்தம் எப்.எம். வானொலி அறிவிப்பாளர் கவிஞர்  ஏ.எம். அஸ்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

நிகழ்வில், பிரதம அதிதியை நூலாசிரியர் பொன்னாடை போர்த்தி கௌரவித்த அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம்  மீடியா போரம் சார்பாக அதன் தலைவர் என்.எம். அமீனினால் டாக்டரும் கவிஞருமான அஸாத் எம் ஹனிபா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

மண்டபம் நிறைந்த பார்வையாளர்களாக நூலாசிரியரோடு பணிபுரியும் டாக்டர்கள், குடும்ப உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். பகல் போஷனத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.





















Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe