தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில தமது இன்னுயிரை நீத்த மாவீரர்களை நினைவு கூறுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில தமது இன்னுயிரை நீத்த மாவீரர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி அனுஷ்ட்டிக்கப்படும் மாவீரர் தினத்தை இம்முறை தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் பெரும் எடுப்பில் அனுட்டிப்பதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொது மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளின் ஆதரவுடன்,மாவீரர்களின் குடும்பத்தினரும், முன்னாள் போராளிகளும் இந்த ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாவீரர் தினத்தை அனுஷ்ட்டிக்க அனுமதி வழங்கவில்லை என்று அடித்துக் கூறியுள்ள அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ, மாவீரர் நாளை அனுஷ்ட்டிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் உண்மை இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றார்.