சம்மாந்துறை பிரதேச சபைக்குற்பட்ட ஆடைத் தொழிற்சாலை வீதி கொங்கிரீட் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டிருக்கின்றது.
சம்மாந்துறை பிரதேச தவிசாளர் கௌரவ நௌசாத் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சஹீல் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பின்தங்கிய மற்றும் குறைபாடுடைய கிராமங்களின் அபிவிருத்தித் திட்டத்தினூடாக இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.