இன்றைக்கு நாளாந்தம் வீதி விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன விபத்துக்களால் பலர் மரணங்களையும் சம்பவித்திருக்கின்றார்கள்.
அதிக வேகமாக வாணங்களைச் செலுத்துதல், கவனமின்றி வாகணங்களைச் செலுத்துதல், பாதசாரிக் கடவைகளில் நிற்காது வாகணங்களைச் ஓட்டிச் செல்லுதல் போன்ற பல்வேறு காரணிகளால் நாளாந்தம் விபத்துக்கள் சம்பவிக்கின்றன. குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில்தான் காலையில் பாடசாலைக்கு சென்று வருகின்றனர்.
இந்த வகையில் சம்மாந்துறையில் கடமை புரியும் போக்குவரத்துப் பொலிசாரினால் ஜமாலியா பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக் கருதி அவர்களுக்கு வீதியினை எவ்வாறு கடக்க வேண்டும் என்ற பயிற்சிகள் நேற்று (2018/11/29) வழங்கி வைக்கப்பட்டது.
சம்மாந்துறை ஜமாலியாப் வித்தியாலயத்திற்கு மாணவர்கள் செல்ல வேண்டுமாக இருந்தால் அவர்கள் அம்பாறை பிரதான வீதியினை கடந்து (நாய்க்குட்டியர்ர சந்தி) தான் பாடசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. அம்பாறை பிரதான வீதி அதிக படியான வாகணங்கள் செல்லும் வீதியாக இருப்பதினால் மாணவர்களின் நன்மை கருதி இவ்வாறான ஒரு வேலைத்திட்டத்தினை போக்குவரத்துப் பொலிசார் ஏற்பாடு செய்திருந்தனர்.
தகவலுக்கு நன்றி - முஹம்மட் றிஸ்விகான்.