Masihudeen Inamullah
மிகவும் நெருக்கடியான வாழ்விடங்களில் அதிகூடிய விலைக்கு வீடு வளவு என வாங்காது தூர நோக்கோடு சிந்தித்து, தாராளமான இட வசதி, சுற்றுச் சூழல், வீட்டுத் தோட்டம், பாதுகாப்பு, பொருளாதார திட்டமிடல், உட்கட்டமைப்புகள் என்பவற்றையும் கருத்தில் கொண்டு விலைகளும் குறைவான பிரதேசங்களை நோக்கி நகர்வது , கூட்டாக புதிய குடியிருப்புக்களை பற்றி சிந்திப்பது காலத்தின் கட்டாயமாகும்.
சில பிழையான சமூக கலாசார பாரம்பரியங்கள் காரணமாக எமது வாழ்விடங்கள் இனியும் விஸ்தரிக்கப் பட முடியாத அளவு நெருக்கடி நிலையில் உள்ளன.
நகரமயமாக்களின் கவர்ச்சிகளின் பின்னால் அள்ளுண்டு போவதும், வங்கிக் கடன்கள், தவணை கொடுப்பனவு குத்தகைகள் என்று குறுக்கு வழி/லிகளை தேடுவதும், கொழும்பில் தொடர் மாடி தொகுதிகளில் போய் முடங்கிவிடுவதும் நிரந்தரமான தீர்வுகளாக மாட்டாது.
ஒவ்வொரு கிராமத்திற்கும் சுயமான சமூக பொருளாதார திட்டமிடல்கள் வேண்டும், தற்காலிக தீர்வுகளாக அன்றி நீண்ட மற்றும் இடைக்கால தீர்வுகள் குறித்து புதிய தலைமுறைகள் சிந்திக்க வேண்டும்.
திட்டமிடப்பட்ட உட்கட்டமைப்புகளுடன் கூடிய புதிய குடியிருப்புக்கள், நாராக்கங்கள், காணி பங்கீடுகள், விவசாய நிலங்கள் என எமது அரசியல் கோரிக்கைகளை காலத்திற்கு ஏற்ப விரிவு படுத்த வேண்டும். உதாரணத்திற்காக கிழக்கில் 40% முஸ்லிம்கள் 4% பரப்பிலேயே வசிக்கிறார்கள்.70% அரச கட்டுப்பாட்டில் இருக்கிறது.
பெரும்பாலான சமூக பொருளாதார அரசியல் நெருக்கடிகளை நாமே ஏற்படுத்திக் கொள்கின்றோம்.