Ads Area

வரதட்சனையை ஆரம்பித்து வைத்தவர்கள் பெண்கள்தான்..??


நன்றி - சபூர் ஆதம்.


வரதட்சணை -பெண்ணின் தகுதியைக் கூட்டும் ஒரு குறுக்கு வழி!!

வரதட்சனைக் கொடுமை என முழங்குகிறோம், அதற்கான தீர்வுதான் என்ன?

உலக செல்வங்களுள் சிறந்தது ஈமானும் இஸ்லாமிய வாழ்க்கையுமுள்ள ஸாலிஹான பெண்னே என்பது நபி மொழி. அப்படியானால் பெண்கள் சமூதாயம் ஏன் விலைமதிப்பற்று வீதில் கிடக்கின்றது...ஏன்!? என்ன காரணம் என்பதை நாம் சிந்திதிருக்கிறோமா...? சிந்தித்ருக்கிறோம் ஆனால் ஆழமாக சிந்திக்க முற்படவில்லை என்பதுதான் உண்மை. மூக்கரையனுக்கு கண்ணாடியைப் பார்க்கும் போதல்லாம் கோபம் வருவதுபோல், ஒரு சிலருக்கு வரதட்சனைப் பற்றி சிந்திக்கவோ,பேசவோ இஷ்டம் கிடையாது.

வாங்க மாட்டேன் வரதட்சணை என சிலர் முடிவெடுப்பதால் வரதட்சணை கொடுமை தீர்ந்து விடுமா? மாறாக "வரதட்சணை" என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால் இப்போது உள்ள திருமண பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடுமா?, அல்லது வெறுமனே வரதட்சணை என்பது ஒரு பாவச்செயல், ஹராம் என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினால் மட்டும் பிரச்சனை தீர்ந்து விடுமா? வரதட்சனை இல்லையென்றால் முதிர்கன்னிகளே இருக்க மாட்டாரகளா?

ஏதோ மாப்பிள்ளையும், மாப்பிள்ளை வீட்டாரும்தான் பணத்தை மட்டுமே பார்ப்பதாக சொல்லுபவர்களுக்கு, எந்த பெண்வீட்டாராவது மாப்பிள்ளையின் குணத்தை மட்டுமே பார்த்து, அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என பார்க்காமல் இருப்பார்களா? அதிகம் சம்பாதிக்கும் பையன்களுக்குத்தான் திருமணம் உடனே நடக்கிறது. பணத்தை பார்த்து மாப்பிள்ளையை தேர்வு செய்யும் பெண்வீட்டார், பையனும் அவனது வீட்டாரும் பணத்திலேயே குறியாக இருப்பதாக குற்றம் சாட்டுவது வேடிக்கையாக இல்லையா?

ஒரு ஏழைக் குடும்பத்தில் இரண்டு, முன்று பெண்பிள்ளைகளுடன் ஒரு பையன். அவனை நன்றாக படிக்கவைக்கிறார்கள், அவன் பல்கலைக்கழகம் வரைச் சென்று பட்டமும் பெருகிறான், எந்த தொழிலும் இல்லாமல் அவன் அவனுடைய முழுக்கவனத்தையும் தன் படிப்பிலயே செலுத்துவதால்,வயது முதிர்ந்த தந்தை அவரது முழுவருமானத்தையும், குடும்பச் செலவுடன், மகனையும் படிப்பிக்கின்றார். அவன் தன் உயர்கல்வியைக்கற்று சிறந்ததொருரிடத்துக்கு வருகிறான். அப்போது அவனின் வயதுதான் என்னவாக இருக்கும்? அதற்குமேல் அவனுக்கு மூத்த சகோதரிமார்களின் நிலைதான் என்ன?

தாய் சொல்லுகிறாள் "மகன் ஊர்போடியார் அவர உள்ளதுமொரு மகளுக்கு நிறைய சொத்து சேர்த்து வைத்துள்ளார், நீ அவரின் மகளை முடித்தால் உங்க பீடி சுத்தும் ராத்தாமார்களுக்கு எப்படியவது ஒரு வீட்டுக்குஞ்ஞைக் கட்டி தேத்தானிக்கடை வசீரைக் கேட்டுப் பண்ணலாம் என நினைக்கிறேன், நீ என்னமகன் நினைக்கிறாய்" என்றவளைப் பார்த்து அவன் என்னதான் சொல்லமுடியும்... இழக்கிழங்கையில் நடந்த்துகொண்டிருப்பதும் இதுதான். வரதட்சணைக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்யும் ஆண்கள் பெண்களிடம் உண்மையான அன்புடன் இருக்க மாட்டார்கள் என்று சொல்லாதீர்கள். இருவரும் இணைந்து வாழும்போது அன்பு தானாகவே வந்து விடும். இது இயறகையின் நியதி.

வரதட்சனையின் உருவாக்கம்தான் என்ன?, எங்கிருந்து ஆரம்பிக்கப்படுகின்றது, சிந்தித்ததுண்டா,ஆரம்பித்து வைத்தவர்களே பெண்கள்தான்.

வரதட்சணைக்கொடுமை என்பது கழையப்பட வேண்டிய தவறான செயல்தான். ஆனால் அதிலும் பெண்வீட்டாரிடமும் தவறு இருக்கிறது. 10வது முடித்த தன் மகளை, 10வது படித்து சிறிய தொழில் செய்யும் ஒரு ஆணுக்கு திருமணம் செய்து வைத்தால் பெண்ணின் தகப்பனாருக்கு எந்த பிரச்சனையும் வரப்போவதில்லை. ஆனால் உண்மையில் நடப்பதுதான் என்ன? அவர்களோ நன்கு படித்து நல்ல வேலையிலிலுள்ள ஒரு பணக்கார, உயர்பதவியில் இருக்கும் மாப்பிள்ளையிடம் வலிய போய், அதிக வரதட்சணை கொடுக்க ஒப்புக்கொண்டு அவதிப்படுகின்றனர்.பெண்களுக்கு தகுதியைக்கூட்டாமல்,பணத்தால் சரிசெய்து கொள்ளலாம் என பெண்வீட்டார் நினைக்கும்வரை வரதட்சணை இருந்துகொண்டுதான் இருக்கும்.

பெண்கள் தங்கள் தகுதியை உயர்த்தி ஆண்கள் தங்களை தேடி வரும்படி செய்வதுதான். இப்போது ஆண்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். வரதட்சணை என்பது பெண்ணின் தகுதியைக் கூட்ட உதவும் ஒரு உபாயம் என்றுதான் நான் நினைக்கிறேன்.

டாக்டருக்குப் படித்த ஒரு பெண்ணின் பெற்றோர், ஒரு பொறியியல் படித்த மணமகன் வீட்டாரிடம் தலைநிமிர்ந்து, தர மாட்டேன் வரதட்சணை என்று கூறலாம். அப்போது மணமகன் வீட்டாரும் வரதட்சணை எதிர்பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் இங்கே பெண்ணின் தகுதி கூடியிருக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள், யாரிடம் இரண்டு பெண் குழந்தைகள் இருந்து அவற்றை நல்ல முறையில் பராமரித்து கல்வி புகட்டி, ஒழுக்கத்துடன் வளர்க்கிறாரோ அவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என தம் இரு விரல்களையும் சமமாக நிறுத்தி சுட்டிக்காட்டினார்கள்.

இன்னும் சிலர், "எனது மகளுக்குக் கம்பஸ் கிடைத்தது. ஆனால் நான் அனுப்ப விரும்பவில்லை." எனக் கூறிப்பெருமிதப்பட்டுக் கொள்வதையும் நாம் காண்கிறோம். ஏன் என்று கேட்டால் "அங்கு சீர்கேடுகள் நடக்கின்றன" என்று இலகுவாகப் பதிலளித்துவிடுவார்கள். ஆனால், சீர்கேடுகள் வீட்டினுள் முடக்கி வைக்கப்படும்போதுதான் நடைபெறுகின்றன என்பதை ஏனோ இவர்கள் மறந்தே விடுகின்றனர். ஆம் வீட்டில் இருக்கும் அதிகமான பெண்கள் மார்க்கப்பணியா புரிகிறார்கள்? இல்லவே இல்லை கதையளப்பதிலும், ரிவி சீரியலிலும், ரடியோ நிகழ்சியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றார்களே தவிர வேறு ஒன்றுமில்லை. போதாதைக்கு தந்தைக்கு தொலைபேசிக்கட்டணத்தையும் கூட்டி வைத்து விடுகின்றனர்.

இன்று வானொலியை திறந்தால், எல்லாமே ஆயிஷா, பாத்திமா, பஹிமா, இவர்கள்தானே மடலனுப்பி மட்டும் அல்லாமல், தொலைபேசி நெரடி தொடர்புலும் தன் சொந்தக் குரலில் சினிமா பாடலொன்றை தன் பொற்றோருக்காக கேட்கிறேன் என வாய் கூசாமல் சொல்லுகிறார்கள்? இவர்கள் மதிக்கமுடியாத சொத்தா...? இவர்களின் பெற்றோர்கள் இஸ்லாம் சொன்ன பெற்றோர்களா?

மேலும், தன் மகளுக்கு/தன் சகோதரிக்கு அடுக்குமாடி வீடொன்று கட்டி, டாக்டர் மாப்பிள்ளை எடுப்பேன் என்று முழங்கும் ஆண்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். "என் மகனை ரஷியாவுக்காவது அனுப்பி டாக்டராக்கி ஒரு பெரிய இடத்தில் நல்ல சீதனம் வாங்கி அவனுக்கு திருமணம் முடிக்க வேண்டும்" எனக் கூறி பெருமிதம் அடையும் தகப்பன்மார்கள் நிறைவே இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு சாராரை மட்டும் குறைகாண்பதை நிறுத்திவிட்டு, ஆக்கபூர்வமாக சிந்தித்து சகல தரப்பிணர்களையும் உள்வாங்கும் ஒரு தளத்தின் ஊடாக சமூகம் சார்ந்த நல்ல முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்த இதயச்சுத்தியுடன் ஒன்று சேர்ந்து செயற்பட நம் எல்லோரும் முன்வர வேண்டும். 
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe