Ads Area

சுடு தண்ணீர் குடிப்பதனால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.


குளிர்ந்த நீரைக் குடிப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கம். உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு.  ‘எடையைக் குறைக்க மட்டும் அல்ல, வெந்நீர் அருந்துவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவும்’ எனச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

உணவு, உடை, இருப்பிடம்போலவே நம் அன்றாட வாழ்வுக்கு தண்ணீர் மிக அவசியம். உடல் வெப்பநிலையைப் பராமரிக்க, ஊட்டச்சத்துக்களை உடலில் சேர்க்க, நச்சுக்களை அகற்ற... என நீர் ஏராளமான வேலைகளை நமக்குள் செய்கிறது. இரண்டு ஆக்ஸஜனும் ஒரு ஹைட்ரஜனும் சேர்ந்தது நீர் எனப் படித்திருப்போம். அது மட்டுமல்ல, நாம் அருந்தும் நீரில் சோடியம், கால்சியம், மக்னீசியம், தாமிரம் எனப் பல்வேறு தாதுஉப்புக்கள் கலந்திருக்கின்றன. இப்படி, பல நன்மைகளை அள்ளித் தரும் நீரைக் கொதிக்கவைத்து அருந்தலாமா, எவ்வளவு சூடாக அருந்தலாம், அதனால், ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம்.

தண்ணீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமான ஒன்று, உடலை சுத்தப்படுத்துவது. அதுமட்டுமல்லாமல், செரிமானம் குறைவாக ஏற்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தால், செரிமானம் நன்றாக நடைபெறும். அதிலும் தினமும் காலையில் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும். மேலும் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு அல்லது தேனைக் கலந்து குடித்தால், உடலுக்கு நல்லது.

மலச்சிக்கல் சரிசெய்ய

இன்று நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு ஈஸியான மருத்துவ செலவில்லாமல் சரிசெய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், சுடு தண்ணீரை குடித்தால், பிரச்சனை நீங்கிவிடும். மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நிறைய கழிவுப் பொருட்கள் குடலில் தங்குவதால் தான் ஏற்படுகிறது. இதனால் வயிற்று வலி, வயிற்று உப்புசம் என்றெல்லாம் ஏற்படுகிறது.

ஆகவே அந்நேரத்தில் சுடு நீரைக் குடிக்க வேண்டும். ஏனெனில் சுடு நீர் உணவுப் பொருட்களை எளிதாக உடைக்கும் தன்மையுடையது. ஆகவே அது குடலில் தங்கிவிடும் தேவையற்ற கழிவுகளை நீக்கி, குடலை நன்கு வேலை செய்ய வைக்கும். இதனால் மலச்சிக்கல் நீங்கும். நிறைய உணவு நிபுணர்கள் உடல் எடை குறைய வேண்டுமென்றால், ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஊற்றிக் குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

உடல் எடையை குறைக்கும்

ஏனெனில் அவை உணவுப் பொருட்களை எளிதில் உடைப்பதால், உடலில் சேரும் கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை குறைக்கும். அதிலும் இந்த சுடு தண்ணீரை, சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும். எதற்கு எலுமிச்சையை சேர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்றால், எலுமிச்சையில் இருக்கும் பெக்டின் என்னும் நார்ச்சத்து, அடிக்கடி ஏற்படும் பசியைக் கட்டுப்படுத்தும். இருமல் மற்றும் அதிக சளியின் காரணமாக டான்சில் மிகவும் வலியோடு இருக்கும். அவ்வாறு வலி ஏற்படும் போது சுடு நீரை குடித்தால், தொண்டை வலி குறைந்து, நீர்மமாக இருக்கும் சளி சற்று கெட்டியாகி, எளிதில் வெளியேறிவிடும்.

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது

சுடு தண்ணீரையோ அல்லது ஏதேனும் சூடான உணவுகளையோ சாப்பிடும் போது, அதிகமாக வியர்க்கும். ஏனெனில் சூடான பொருள் உடலில் செல்லும் போது, உடல் வெப்பநிலை அதிகரித்து, உடலை குளிர்ச்சியாக்க வியர்க்கிறது. வியர்ப்பதால் சருமத்தில் இருக்கும் செல்களில் உள்ள அதிகமான தண்ணீர் மற்றும உப்பு, உடலில் இருந்து வெளியேறிவிடுகிறது. எப்போது சுடு தண்ணீரை குடிக்கின்றோமோ, அப்போது உடலில் இருக்கும் அதிகமான கொழுப்புக்கள் கரைந்து, இரத்த குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது.

சளி,இருமல்,ஜலதோஷம் போன்ற தொல்லைகள் வராமல் நின்று விடும் 

வெளியில் சென்று மழையிலோ ,குளிரிலோ .பனியிலோ நனைந்து வீட்டிற்கு வந்தால் .தலையை உடம்பை துடைத்து விட்டு இரண்டு டம்பளர் வெந்நீரைக் குடியுங்கள் ..சளி,இருமல்,ஜலதோஷம் போன்ற தொல்லைகள் வராமல் நின்று விடும் .

மூக்கு அடைப்புக்கு சிறந்த மருத்துவர் வெந்நீர்தான்.

மூக்கு அடைப்புக்கு சிறந்த மருத்துவர் வெந்நீர்தான். வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு குணமாகும்.வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. 

கால் வலி குறையும்

வெளியில் சென்று அலைந்துவிட்டு வந்தால், கால் பாதங்கள் வலிக்கும். அவ்வாறு வலிக்கும் போது, பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, கொஞ்ச நேரம் அதில் பாதத்தை வைத்து எடுங்கள். கால் வலி குறையும்.

வெந்நீர் நோய் தீர்க்கும் ஒரு அருமருந்து .அசட்டை செய்யாமல் கடைபிடியுங்கள் ஆரோக்கியம் உங்களைத் தேடிவரும் .

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe