கிந்தோட்டையிலும் திகனையிலும் ஏற்பட்ட கலவரங்கள் திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல, ஒரு நாளைக்கு முன்னமே வெளியூர்களில் இருந்து இனவாதிகள் முஸ்லிம் பகுதிகளைத் தாக்குவதற்கு ஒன்று கூடுகின்றார்கள் என்று அந்த ஊரைச்சேர்ந்த சிங்கள சகோதரர்கள் முஸ்லிம்களிடம் கூறி கவணமாக இருக்குமாறு கூறியுள்ளார்கள்.
இதனை அறிந்த முஸ்லிம்கள் அழுது ஒப்பாரிவைத்து தங்களையும் தங்களது சொத்துக்களையும் பாதுகாத்து தறுமாறு நம்மட தலைவர்கள் தொடக்கம் மற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை உதவி கேட்டு அழுது மன்றாடி உள்ளார்கள். இதனை சட்டம் ஒழுங்கு அமைச்சர் மட்டுமல்ல நாட்டின் பிரதமராகவும் இருந்த ரணிலிடம் நம்மட தலைவர்கள் விடயத்தை எடுத்துக்கூறி பாதுகாப்பு தறுமாறு வேண்டியுள்ளார்கள்.
அத்தனை வேண்டுகோளும் செவிடன் காதில் ஊதிய சங்கானது. அதன் பின் இனவாதிகள் தங்களது வேட்டையை ஆரம்பித்து முடித்ததன் பின் ஐந்து நாட்கள் கழித்து பாதுகாப்பு கொடுத்தார் ரணில். அந்த பாதுகாப்புக்கு வந்தவர்களும் மிச்சம் சொச்சத்துக்கு அவர்களின் வேலையை காட்டினார்கள். இதனை வீடியோக்களில் பார்த்தோம்.
இப்படிப்பட்ட ரணில்தான் பிரதமராக வேண்டுமென்று நம்மட அதுகளும், இதுகளும் என்ன பாட்டை படுகின்றார்கள் என்னும்போது ஆச்சரியமாகத்தான் உள்ளது.
கிந்தோட்டை அம்பாரை திகன மக்களின் வதுவாத்தான் இப்போது ரணிலைப்போட்டு ஆட்டுது என்றால் மிகையாகாது.
-முனைமருதவன்