U Mohamed Ishark
அமைச்சர் வசந்த சேனாநாயக்க தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் தற்போது அலரி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்று வருகின்றது.
அண்மையில் சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த வசந்த சேனாநாயக்க, தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார்.
இருப்பினும் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டிருந்தமை அனைவராலும் விமர்சிக்கப்பட்டு வந்தது.
வசந்த சேனாநாயக்கவை ஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைத்துக் கொண்டால் தான் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டத்தில் அமைச்சர் வசந்த சேனாநாயக்க கலந்து கொண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.