அனைவருக்கும் வணக்கம்,
“தமிழா ஊடக வலையமைப்பு, இலங்கை” பெருமையுடன் வழங்கும், அறிவுமேதை ஈழமேகம் பக்கீர்தம்பி நினைவு போற்றும், உலகம் திரும்பிப் பார்க்கவிருக்கும் பெண்களின் மேன்மைதனைப் போற்றும் உயரிய நோக்குடைய கவியரங்கம் வரும் 2019-இல் மார்ச் மாதம் வரும் பெண்கள் தினத்தையொட்டி மிகச் சிறப்பாக நடக்கவுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவிக்கிறோம்.
தலைப்பு: “புறப்படு பெண்ணே பொங்கியெழு"
கவியரங்க தலைமை: தென்னிந்தியக் கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் பாடலாசிரியருமான தமிழ்த்தென்றல்" உயர்திரு. வித்யாசாகர் அவர்கள், குவைத்திலிருந்து வருகைதந்து விழாவினை சிறப்பிக்கவுள்ளார்.
நிபந்தனைகள்:
அனைவரது கவிதைகளும் நாற்பது வரிகளுக்குள்ளாகவோ அல்லது அவை வணக்கம், சபை வணக்கத்தோடு கூடி ஐந்து நிமிடத்திற்குள் வாசித்துமுடியும் வகையிலோ இருத்தல் கட்டாயம் ஆகும்.
அவரவர் கவிதையினை அவரவர் சுயமாக எழுதி, மிக கம்பீரத்தோடு வாசிக்கும் பாங்கில் அனைத்து கவிதைகளும் இருத்தல் மேடைக்கு அழகை சேர்க்கும். அதிலும், இதற்கு முன் வெளிவராத கவிதையாக இருத்தல் வேண்டும்.
கவிதைகளை தேர்ந்தெடுக்கும் உரிமை தேர்வுக்குழுவை மட்டுமே சார்ந்தது.
கவிதைகளை அனுப்புவோர் எதிர்வரும் 2018 திசம்பர் மாதம் 31-ஆம் திகதிக்குள் தங்களின் படைப்புக்களை இவ்விரு மின்னஞ்சலுக்கும் அனுப்பி உதவவும்.
vidhyasagar1976@gmail.com
jaleesmohammad@gmail.com
கண்டிப்பாக இரு மின்னஞ்சல் முகவரிக்கும் கவிதைகளை அனுப்புதல் வேண்டும். அதிலும் கவிதைகளை அனுப்புவோர் குறிப்பிட்ட கால வரையறைக்குள் அனுப்பவேண்டும். 31.12.2018 -ற்குப் பின் வரும் எக்கவிதையும் எப்பேர்ப்பட்ட ஆளாயினும் ஏற்க இயலாது.
நிறைய போட்டியும் எதிர்பார்ப்பும் உள்ளமையால், விரைவில் அனுப்புவோர் கவிதைகளே முதன்மையாக கவனத்தில் எடுக்கப்படும்.
கொடுத்துள்ள கடைசி திகதி முடிந்தபின் அழைத்து ‘ஏன் என்னை தேர்வுசெய்யவில்லை, நான் பெரிய கவிஞர் என்றெல்லாம் சொல்ல அனுமதியில்லை.
கவிதைகள், வெறுமனே பெண்ணியம், பெண் தேவதை, பெண் தாயிற்கு சமம், போன்ற வெறும் கவர்ச்சி சொற்களோடு இல்லாமல், பெண்களின் தவிப்பு, ஏமாற்றம், வஞ்சிக்கப்படுத்தல், உறவுகளின் தொந்தரவு, உளவியல் குழப்பங்கள், பெண்ணியரின் மெருமை, மதிப்பு, அதோடு அவர்களின் மேன்மைக்கு உதவும் வகையிலான நம்பிக்கை வரிகள் போன்ற மிக ஆக்கப்பூர்வமான கவிதைகளே எதிர்பார்க்கப்படுகிறது.
எக்காரணம் கொண்டும், தனியே,தேர்வாளரையோ, கவியரங்க நடுவரையோ, சிறப்பு விருந்தினர்களையோ சிபாரிசுக்கு அழைக்கவோ பேசவோலாகாது.
சரியாக ஆறு கவிஞர்களே தேர்ந்தெடுக்கப் படுவர். அற்புதமான கவிதைகள் நிறைய வரும் பட்ச்சத்தில் எட்டு கவிஞர்களுக்கு வாய்ப்பளிக்க விழா குழு தீர்மானிக்கலாம். குறிப்பாக இலங்கைக் கவிஞர்கள் மட்டுமே பங்கேற்க இயலும்.
உணர்வுக்கு மொழி வழியே அழகியல் சேர்த்து, அதை இலக்கணத்தோடு சீர் செய்கையில் அவரவருக்கான தனிப்பட்ட கவிதைகள் அவர்வரிடம் இருந்து உதிக்கும். அவைகளை உடனே அனுப்பிவிடாமல், மேலும் மேலும் பட்டைதீட்டி சிந்தனை கூர் கூட்டி செறிவான படைப்பாக வரும் டிசம்பர் 31 திகதிக்குள் அனுப்பி உதவுங்கள்.
அனைவருக்கும் நன்றி..
வணக்கத்துடன்..
விழாக் குழு தலைமை
தமிழா ஊடக வலையமைப்பு, இலங்கை