கடந்த 26ம் திகதி முதல் இன்று வரை நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் சலசலப்புக்கள் மத்தியில் இருவரின் பெயர்கள்தான் மிகவும் பரவலாக அடிபட்டுக் கொண்டிருந்தது அவர்கள்தான் வடிவேல் சுரேஸ் மற்றும் வசந்த சேனநாயக்க ஆவார்கள்.
இவர்கள் இருவரும் பல தடவைகள் மஹிந்த தரப்புக்கும், ரணில் தரப்புக்குமாக மாறி மாறி தாவி தாவித் திரிந்தார்கள் இறுதியாக வசந்த சேனநாயக்க மஹிந்த தரப்போடு இருந்து தற்போது மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டிருக்கின்றார்.
எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கே நான் ஆதரவு தருவேன் என்னால் இரு கட்சிகளும் புண்பட்டிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளவும் எனது அமைச்சரவையை நான் ராஜினாமா செய்துவிட்டேன் என சற்றுமுன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட வசந்த சேனாநாயக்க எம்.பி தனது அறிவிப்பை வெளியிட்டார் .