Ads Area

சாதாரண தரப் பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவிகளின் ஆடை விடையத்தில் ஏதேனும் பிரச்சினை எழுந்தால்..??

கலாச்சார ஆடைகளை அணிந்து கொண்டு பரீட்சை எழுத போகும் மாணவிகளின் ஆடை சம்பந்தமாக பரீட்சை மண்டபங்களில் பல வகையான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக குரல்கள் இயக்கத்திற்கு செய்திகள் எட்டியிருக்கின்றன.

கலாச்சார ஆடைகளை அணிந்து கொண்டு வரும் மாணவிகள் தங்களின் ஆடை சம்பந்தமாக ஏதாவது பிரச்சினைகளை ஏற்படுத்தினால் அவர்களின் தகவல்களை குறிப்பேட்டில் எழுதி உரிய அலுவலகங்களுக்கு அனுப்புமாறு பரீட்சைக் கண்காணிப்பாளர்களுக்கு உத்தியோக பூர்வமற்ற வகையில் மாகாணக் கல்வித் திணைக்களத்திலிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன என்றும் அதன் மூலம் அந்த மாணவியரின் பெறுபேறுகளில் பாதிப்புச் செலுத்துகின்றன நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்கள் அரங்கேற்றப்படுவதாகவும் குரல்கள் இயக்கத்திற்கு நம்பத்தகுந்த செய்திகள் கிடைத்திருக்கின்றன.

அவரவர் தமது கலாச்சார ஆடைகளை அணிவதற்கான உரிமையை இலங்கையின் அரசியல் யாப்பும்,பாடசாலை ஒழுக்கக் கோவைகளும் அனுமதிக்கின்றன.ஒரு மாணவி அணிந்து வரும் கலாச்சார ஆடைகளை பரீட்சைக் கண்கானிப்பாளர்கள் ஆட்சேபிப்பது அடிப்படை உரிமை மீறலாகும்.
கல்விப் பொதுத்தராதர பரீட்சை மண்பங்களில் உங்களின் கலாச்சார ஆடை சம்பந்தமாக ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்தால் அதனை உடனே குரல்கள் இயக்கத்திற்குத் தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.மாணவியரின் கலாச்சார ஆடை விவகாரத்தில் சட்டத்தை மீறி நடந்து கொள்ளும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு குரல்கள் இயக்கம் தயாராக இருக்கிறது.

மேலதிக தகவல்களுக்காக எமது 0094766484119 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe