அன்சார் காசீம்.
சம்மாந்துறை வங்களாவடியில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலையை ஹமீடியாஸ் ஆடை உற்பத்தி நிறுவனத்திடம் (12) கையளிக்கட்டது.
சம்மாந்துறை வங்களாவடியில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலையை ஹமீடியாஸ் ஆடை உற்பத்தி நிறுவனத்திடம் (12) கையளிக்கட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், கட்டங்களின் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.சந்திரமோகன், பிரதம பொறியியலாளர் எம்.சாஹீர், கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் கே. இளங்கோவன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் பிரத்தியோகச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சகுபீர், ஹமீடியாஸ் ஆடை உற்பத்தி நிறுவனத்தின் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இத்தொழிற்சாலையை ஆரம்பிப்பது சம்பந்தமாக ஆராயப்பட்டதுடன், தொழிற்பயிற்சிகள் அடுத்தமாதமளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. வெகுவிரைவில் இதனை திறப்பதற்கான ஏற்பாடுகளும் கிழக்கு மாகாண சபை மேற்கொள்ளவுள்ளது.