சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் மல்வத்தை 03 ( மஜிட்புரம்) கிராம நிலதாரி பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற கிராம சக்தி நிகழ்ச்சி திட்டத்தின் கிராம சக்தி வாரத்தினை முன்னிட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் முதல் கட்ட நிகழ்வாக மஜிட்புர ஜும்மா பள்ளிவாசல் மையாவடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சிரமதான நிகழ்வு பொதுமக்களின் ஒத்துழைப்புடன் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும் ,மல்வத்தை வட்டார SLMC இன் அமைப்பாளரும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய எம்.பி.எம் அன்வர் அவர்களும் ,மஜிட்புர கிராம நிலதாதரி எம்.ஐ.எம். சப்ராஜ் அவர்களும் ,சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.ஏ. மஜீட் அவர்களும் ,பொருளாதார உத்தியோகத்தர் ஏ. சியாமா EDO அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.