Ads Area

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் விருதுக்கு எம்.எம்.ஜபீர் தெரிவு.

“கிழக்கு மாகாண ஊடகவியலாளர் விருது” விழாவில் நுஜா ஊடக அமைப்பின் ஊடகவியலாளரும் எமது நாவிதன்வெளி Life Line சமூக சேவை அமைப்பின் பொருளாளருமான எம்.எம்.ஜபீர் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 24வது நிறைவையொட்டி கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஊடகத்துறையில் பிரகாசிக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள ஊடகவியலாளர்கள் 50 பேர் தெரிவு செய்யப்பட்டு 'கிழக்கு மாகாண ஊடகவியலாளர் விருது' வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இதில் சகோதரர் எம்.எம்.ஜபீர் இளவயதில் ஊடகத்துறைக்குள் பிரவேசித்து தனது விடா முயற்சியினால் குறுகிய காலத்திற்குள் சிரேஷ்ட ஊடகவியலாளர்களின் வழிகாட்டலில் ஊடகத்துறையில் பிரகாசித்து தன்னை ஒரு இளம் ஊடகவியலாளராகவும் எல்லோராலும் விரும்பப்படுகின்ற ஒரு துடிப்பான ஊடகவியலாளராகவும் ஒரு தேசிய ஊடக அமைப்பான நுஜா ஊடக அமைப்பின் உதவிச் செயலாளராக பதவி வகிக்கக் கூடியவாறு தன் ஆளுமையை வளர்த்துக் கொண்ட ஒரு ஊடகவியலாளன் என்பதுடன் எமது நாவிதன்வெளி Life Line சமூக சேவை அமைப்பின் பொருளாளருமாக இருந்துவரும் எம்.எம்.ஜபீர் அவர்களுக்கு எமது மண் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். 
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe