Ads Area

சம்மாந்துறையில் இடம்பெற்ற மெஸ்ரோ அமைப்பின் சமூக மாற்றத்திற்கான தலைமைத்துவ செயலமர்வு..

அகமட் எஸ்.முகைடீன்.

முஸ்லிம் கல்வி, சமூக ஆய்வு நிறுவனத்தின் 'மெஸ்ரோ' ஏற்பாட்டில் வலிமையான சமூகத்திற்கு ஆளுமையான இளைஞர்கள் எனும் தொனிப்பொருளில் சமூக மாற்றத்திற்கான தலைமைத்துவ செயலமர்வு சம்மாந்துறை தொகுதி இளைஞர்களுக்கு திங்கட்கிழமை மெஸ்ரோ அமைப்பின் தலைவரும் பதில் நீதவானுமாகிய சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.நசீல் தலைமையில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் சம்மாந்துறை, மத்திய முகாம், சவளக்கடை, கொலணி, இறக்காமம், வரிப்பெத்தான்சேனை, வாங்காமம், மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு பிரதேசங்களைச் சேர்ந்த 1000 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் மெஸ்ரோ அமைப்பின் ஸ்தாபக தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் - இலங்கையின் சமகால அரசியலும் முஸ்லிம் இளைஞர்களின் வகிபாகமும் என்னும் தலைப்பிலும், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறைத் தலைவரும் மெஸ்ரோ அமைப்பின் ஸ்தாபக உறுப்பினருமான கலாநிதி எம்.எம். பாசில் - புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சியும் சிபான்மைச் சமூகங்களும் என்னும் தலைப்பிலும், கலாநிதி ரவூப் செய்ன் - முரண்பாட்டுச் சூழலில் இளைஞர்களின் வகிபாகம் என்னும் தலைப்பிலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் மொழித்துறை பதில் தலைவருமான பேராசிரியர் றமீஸ் அப்துல்லா - தடுமாறும் இளைஞர்களும் சமூகப் பொறுப்புக்களும் என்னும் தலைப்பிலும், மனநல வைத்தியர் சராப்தீன் - போதையற்ற தலைமுறை என்னும் தலைப்பிலும் கருத்துரையாற்றினார்;கள்.

நாளைய தலைமுறையினருக்கு மிகவும் தேவையான, காத்திரமான கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்ட இச்செயலமர்வில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மெஸ்ரோ அமைப்பின் இலச்சினை பொறிக்கப்பட்ட ரிசேட்கள் வழங்கி வைக்கப்பட்டன.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe