ஏ.ஜே.எம்.ஹனீபா.
சம்மாந்துறை அல்-முனீர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.அப்துல் ஜப்பார் நேற்று முந்தினம் (18) கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை அதிபர் சேவை யின் தரம் - II இனை கொண்ட இவர் கமு/சது கஸ்ஸாலி முஸ்லீம் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி வந்த நிலையிலேயே அல்-முனீர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவி ஏற்பு நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் கலந்து கொண்டார். மேலும் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.