Ads Area

15ஆம் கொளனி விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் கௌரவிப்பு விழா.

எம்.எம்.ஜபீர்

நாவிதன்வெளி 15ஆம் கொளனி விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் கௌரவிப்பு விழா அதிபர் கே.பேரானந்தம் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வுக்கு  தமிழ் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது 2017,2018ஆம் ஆண்டுகளில் தேசிய மற்றும் மாகாண ரீதியில் சாதனை படைத்தவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்கள், கல்வி கல்லூரிக்கு தெரிவானவர்கள், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், கா.பொ.த.சாதாரண தரத்தில் சிறந்த பெறுபெற்றவர்கள் என பாடசாலையில் சாதனை படைத்த 42 மாணவர்கள் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் ரீ.கலையரசன், சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர் பொன்.செல்வநாயகம், நாவிதன்வெளி கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து, சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் கே.அற்புதராஜா, பிரதி அதிபர் எஸ்.சாமிதம்பி, ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், பெற்றோர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe