Ads Area

சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் சாதாரண தர பரீட்சையில் 100 வீத சித்தி.

காரைதீவு நிருபர் சகா.

சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொத. சா.தரப்பரீடசைப்பெறுபேறு 100வீத சித்தியை பெற்றிருப்பதாக அதிபர் எம்.விஜயகுமாரன் தெரிவித்தார்.

12மாணவர்கள் பரீட்சைக்குத்தோற்றியதில் 12 பேருமே க.பொ.த உயர்தரத்திற்கு தகுதிபெற்றிருப்பதாக அவர் கூறுகிறார்.

சிறந்த பெறுபேறுகளாக தெய்வேந்திரன் தனுஜன் கணேசன் டில்சியா ஆகியோர் 4ஏ 3பி 2சி சித்திகளைப்பெற்றுள்ளனர்.எஸ்.பேணுஜா 3ஏ 3பி 3சி சித்திகளைப்பெற்றுள்ளார்.

வரலாற்றில் பாடரீதியாக கூடுதல் சித்திபெற்றிருப்பது மற்றுமொரு சாதனை என்கிறார்.

விஞ்ஞானப்பாடத்தில் 100வீத சித்தி பெற்றுள்ளனர். அதேவேளை தமிழ் வரலாறு ஆகிய பாடங்களில் 91வீத சித்தியும் கணிதத்தில் 83வீதசித்தியும் ஆங்கிலத்தில் 67வீத சித்தியும் பெறப்பட்டிருக்கிறது.சைவநெறி கத்தோலிக்க சமயத்திலும் 100வீத சித்திபெறப்பட்டிருக்கிறது.

தொகுதிப்பாடங்களைப்பொறுத்தவரை அனைத்துப்பாடங்களிலும் 100வீத சித்தி பெறப்பட்டிருக்கிறது. அதாவது முயற்சியாண்மை நாடகமும் அரங்கியலும் விவசாயஉணவுதொழினுட்பம் தகவல்தொடர்பாடல் தொழினுட்பம் ஆகிய பாடங்களிலே 100வீத சித்தி கிடைக்கப்பெற்றுள்ளது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe