Ads Area

உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தாயை பிச்சையெடுத்து காப்பாற்றி வரும் 6 வயது சிறுமி.

கர்நாடக மாநிலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயை ஒரு சிறுமி பிச்சை எடுத்து காப்பாற்றி வருகிறார். கர்நாடக மாநிலம் கோப்பால் மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுமியின் தாய் மதுப்பழக்கத்தினால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாத அந்த சிறுமி பிச்சை ஏடுத்து தனது தாயை கவனித்து வந்துள்ளார். 

இது குறித்து தகவலறிந்த மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் அந்த சிறுமி மற்றும் தாய்க்கு உதவ முன்வந்துள்ளனர். அவர்கள் சிறுமியின் தாயை மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உதவி வருகின்றனர். இதேபோல் சிறுமியின் படிப்பிற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் கவனித்து வருகின்றனர். 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe