படைத்தவனின் திருப்தியை மறந்து படைப்பினங்களின் திருப்திக்காக இறை இல்லத்தை உடைத்த கோழைத்தனமான நிகழ்வு அநுராதபுர மாவட்டம் கெகிராவை, மடாடுகம எனும் பிரதேசத்தில் 29.05.2019 அன்று நடைபெற்றுள்ளது.
குறித்த செயற்பாட்டை செய்தவர்கள் ஊர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் அனுமதி அணுசரனையுடனே இறைவனின் கோபத்தை பெற்றுத்தரும் குறித்த மிருகத்தனமான செயலை செய்ததாக அவர்களே வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
குறித்த பள்ளி வாசல் ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் இல்லாவிட்டாலும் எந்த அமைப்பைச் சார்ந்தவர்களின் இறையில்லம் என்றாலும் இறையில்லத்தை உடைத்த செயலையும், அதை செய்தவர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் அனைவரையும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிப்பதுடன் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.
புனித மிக்க ரமழானுடைய மாதம் என்று கூட பாராமல் இறையில்லத்தின் மீது கைவைக்கும் கீழ்த்தரமான செயற்பாட்டினை செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த அமைப்பை சார்ந்தவர்களாக இருப்பினும் பாரபட்சமின்றி அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்னால் நிருத்தப்பட வேண்டும் என்பதுடன் சமூக ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் குறித்த செயலுக்கு உதவி செய்த ஊர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் உட்பட அனைவருக்கும் உச்சகட்ட தண்டனை வழங்கப்படவேண்டும்.
மாற்று மதத்தவர்களின் வணக்கத்தளங்களையே புனித இஸ்லாம் மதித்து நடக்க சொல்லும்பொழுது, இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்களே பள்ளிவாசலை உடைத்திருப்பது எந்த முஸ்லிமின் உள்ளமும் ஏற்றுக்கொள்ளாத மோசமான செயற்பாடாகும். "அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்?" 2 : 141 இதுபோன்ற நாசகார செயற்பாட்டை செய்கின்றவர்கள் மிகப்பெரும் அநியாயக்காரர்கள் என்று இறைவனே குறிப்பிடுகிறான்.
மத நல்லிணக்கம் என்ற பெயரில் பெயர் தாங்கி முஸ்லிம்கள் செய்யும் முட்டாள் தனமான செயற்பாடுகள் இனவாதிகளுக்கு மீதம் இருக்கும் பள்ளிவாசல்களை உடைப்பதற்கு வழிகாட்டும் செயலாகவே அமைகிறது.
எனவே இது போன்ற இழி செயலை செய்பவர்களை அவர்களின் தலைமையான ஜம்மியத்துல் உலமாவும் கண்டிப்பதுடன் எதிர்காலத்தில் இது போன்ற ஈனத்தனமான செயல்களை செய்யவிடாமல் தடுக்க வேண்டும் என்று ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
M.F.M பஸீஹ் M.I.Sc
செயலாளர்
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்.