சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வருடாந்த இப்தார் நிகழ்வும், புதிய அம்பியூலன்ஸ் வாகனம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சம்மாந்துறை வைத்தியசாலையில் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரின் முயற்சியில் சீன அரசாங்கத்தின் 814 மில்லியன் ரூபாய் செலவில் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுவரும் மூன்று மாடிக் கட்டிட தொகுதியினையும் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் பார்வையிட்டார்.