இலங்கை மின்சார சபையினால் “CEB Care” என்ற Mobile Application மின்சார பாவனையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மொபைல் அப்ளிகேஷனின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (17) திங்கட்கிழமை மின்சக்தி, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ரவி கருநாணாயக்கவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
மேலும் திட்டமிடப்பட்ட மின் துண்டிப்புகள் தொடர்பான விபரங்கள், மின் பாவனை தொடர்பான விபரங்கள், கட்டணங்கள் மற்றும் கணக்கு நிலுவை தொடர்பான விபரங்கள் போன்றவற்றை பாவனையாளர்கள் CEB Care மொபைல் அப்ளிகேஷன் மூலம் இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் CEB Care மொபைல் அப்ளிகேஷன் மூலம் பாவனையாளர்கள் இலகு வழியில் ஒன்லைன் மின் கட்டணங்களையும் செலுத்தமுடியும். இந்த CEB Care மொபைல் அப்ளிகேஷன், இலங்கை மின்சார சபையின் உள்ளக நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட CEBAssist Solution Suite இன் ஒரு பகுதி என்பதோடு, இந்த Solution Suite முற்றுமுழுதாக இலங்கை மின்சார சபையின் மின் பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்காத்தில் மேலும் பல சேவைகளை CEB Care மொபைல் அப்ளிகேஷன் மூலம் வழங்க இலங்கை மின்சார சபை எதிர்பார்த்துள்ளது. CEB Care மொபைல் அப்ளிகேஷனை பாவனையாளர்கள் தற்போது App Store: http://bit.ly/cebCareLK மற்றும் http://bit.ly/cebCare என்ற link இன் ஊடாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
செய்தி மூலம் - விடியல்
செய்தி மூலம் - விடியல்