குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேற்றியல் மருத்துவர் சாபி தொடர்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் அநேகமானவை கருத்தடை சத்திரசிகிச்சை தொடர்பானதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சிசேரியன் சத்திரசிகிச்சையின் பின்னர் தங்களது உடலில் ஏதேனும் உடல் உபாதை ஏற்பட்டுள்ளதா என்பதனை அறிந்து கொள்வதற்காகவே 90 வீதமான தாய்மார் இந்த முறைப்பாடுகளை செய்துள்ளனர்.