Ads Area

தேசிய அடையாள அட்டையில் நபரின் கைரேகையை சேர்த்துக் கொள்ள தீர்மானம்.

தேசிய அடையாள அட்டையில் உரிய நபரின் கைரேகையை சேர்த்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தில் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

பழைய தேசிய அடையாள அட்டையிலுள்ள பல பலவீனங்கள் புதிய தேசிய அடையாள அட்டை மூலம் நீக்கப்பட்டுள்ளது. உதாரணமாக புகைப்படத்தை மாற்றுதல் அல்லது வேறு தகவல்களை மாற்றுதல் போன்ற விடயங்களை புதிய அடையாள அட்டையில் மேற்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் மேலும் தேசிய அடையாள அட்டையை பலப்படுத்துவதற்காக நபர்களின் கைரேகை அடையாளங்களை உள்ளடக்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது கைரேகை பெற்றுக்கொள்வதற்கு சட்டத்தில் அனுமதி உள்ளதாக ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe