Ads Area

அவசியம் சாப்பிட வேண்டிய அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மாதுளம்பழம்.

மாதுளம் பழம் மிகச் சிறந்த உணவாக அனைவராலும் ஏற்கப்படுகின்றது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி, வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் சக்தி, கட்டிகளை எதிர்க்கும் சக்தி, வைட்டமின் ஏ, சி, ஈ, ஃப்போலிக் ஆசிட் என நிறைந்த சத்துக்கள் கொண்டதால் அநேக நோய்களை எதிர்க்கும் சக்தி கொண்டதாக ஆகிவிடுகின்றது.

மாதுளம் பழம் சாப்பிடுவதனால் நமக்குக் கிடைக்கும் அளப்பெரிய நன்மைகள்.

* ரத்தத்தினை சுத்தமாய் வைத்திருக்கின்றது.

* ரத்த குழாய் அடைப்புகள் ஏற்படாமல் தவிர்க்கின்றது.

* ஆக்ஸிஜன் கூடுதலாகச் கிடைக்கின்றது.

* கொலஸ்டிரால் அளவினை கட்டுப்படுத்துகின்றது.

* வீக்கம், மூட்டுக்களில் வீக்கம் இவற்றினைத் தவிர்க்கின்றது.

* இருதய பாதுகாப்பு.

* ப்ராஸ்டிரேட் புற்றுநோய் (ஆண்களுக்கு) ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.

* ஞாபக சக்தியினைக் கூட்டுகின்றது.

* ரத்தக் கொதிப்பினைக் குறைக்கின்றது.

* ஜீரண சக்தியினைக் கூட்டுகின்றது.

இத்தனை உதவிகள் செய்யும் மாதுளம் பழத்தினை இனியாவது உட்கொள்வோம். யாருக்கும் சர்க்கரை சேர்த்த இனிப்புகளை வழங்குவதினைக் காட்டிலும் மாதுளம் பழங்களை வாங்கிக் கொடுப்பது அவர்கள் மீது நீங்கள் காட்டும் உண்மையான அன்பாக வெளிப்படும்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe