(காரைதீவு நிருபர் சகா)
காலஞ்சென்ற தனது தந்தை நினைவாக தனயன் பிரபலமான வீதியொன்றுக்கு 3கண் LED மின்விளக்குகளைப்பொருத்தி ஒளியூட்டியுள்ளார்.
இச்சம்பவம் காரைதீவில் நேற்று இடம்பெற்றுள்ளது.
காரைதீவின் பிரபல சமுகசேவையாளர் சமாதானநீதிவான் பொ.ஸ்ரீஅருட்கடாட்சம் தனது தந்தையார் காலஞ்சென்ற ஆசிரியர் கந்தப்பன் பொன்னையாவின் ஞாபகார்த்தமாக விபுலமுனி விபுலாநந்தஅடிகளார் பிறந்த வீதிக்கு 3கண் LED தெருமின்விளக்குகளைப்பொருத்தி ஒளியூட்டியுள்ளார்.
அம்மின்விளக்குகளை அவர் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறிலிடம் வழங்கிவைத்தார். சபை ஊழியர்கள் அவற்றை விபுலாநந்தாவீதிச்சந்தி மற்றும் சுவாமிகள் பிறந்த இல்லம் மற்றும் மணிமண்டபம் முன்னாகவும் பொருத்தினர்.
இதனால் அப்பகுதி இரவில் ஜெகஜோதியாகக்காட்சியளிக்கின்றது.