இலங்கையில் வீட்டில் இருந்தபடி பேருந்துகளுக்கான முன்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் நிற்காமல் இணையம் மற்றும் GPS தொழில்நுட்பம் ஊடாக தூர பயணங்களுக்கான பயண ரிக்கெட்டினை வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் புதிய டோக்கன் முறை ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த டோக்கன் முறை அறிமுகப்படுத்துவதன் மூலம் மிகவும் இலகுவாக பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.