(மாவனல்லை நிருபர்)
“துருலிய வெனுவென் அபி” எனும் தொனிப்பொருளில் இலங்கை இராணுவம் முன்னெடுத்துள்ள மர நடுகை வேலைத்திட்டத்துக்கு மாவனல்லை ரீ–டிரீ ஸ்ரீலங்கா (Re-tree Srilanka ) எனும் அமைப்பினால் 2ஆயிரம் மரக்கன்றுகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
மாவனல்லை இளைஞர்களை உள்ளடக்கிய ரீடிரீ ஸ்ரீலங்கா அமைப்பினால் குறித்த மரக்கன்றுகள் கடந்த செவ்வாய்க்கிழமை; கேகாலை மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜகத் பல்லேகும்பரவிடம் கையளிக்கப்பட்டது.
வில்பத்து தேசிய வனத்தை பாதுகாக்கும் வகையில் “துருலிய வெனுவென் அபி” எனும் தொனிப்பொருளில் அப்பகுதியில் மரநடுகை வேலைத்திட்டமொன்றை இலங்கை இராணுவம் முன்னெடுத்து வருகின்றது. அவ்வேலைத்திட்டத்துக்கு மாவனல்லை இளைஞர்களினால் 2ஆயிரம் மரக்கன்றுகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.