சாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் !!
சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்று இன்று மதியம் தீக்கிரையாகி உள்ளது. தீ பரவலுக்கான சரியான காரணம் இன்னும் அறிய முடிய வில்லை.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சாய்ந்தமருது 18ஆம் வட்டாரத்தில் உள்ள இந்த வீடு களஞ்சிய சாலை போன்று இயங்கி வந்ததாகவும், அங்கு பசளை போன்ற பொருட்கள் களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாகவும் அறிய முடிகிறது.
முழுமையாக சேதமாக்கப்பட்ட இந்த அனர்த்தத்தினால் களஞ்சியசாலையில் இருந்த சகல பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது.
எமது செய்தியாளர்.
எம்.ஐ.எம். சர்ஜுன்.