இறக்காமம் இலுக்குச் சேனை வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம்; இஸ்மாயில் எம்.பி திறந்து வைப்பு!
பண்பு, அறிவு மற்றும் வலுமிக்க மனித நேய மாணவச் சந்ததியினரை உருவாக்கும் நோக்கில அண்மையிலுள்ள சிறந்த பாடசாலை எனும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இறக்காமம் கமு/ சது/ இலுக்குச் சேனை ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலயத்தில் கற்றல் நடவடிக்கைகளுக்கு தேவையான ஆசிரியர் விடுதிக் கட்டிடம் அண்மையில் (05) திறந்து வைக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களின் முயற்சியினால் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் இக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.