Ads Area

அபிவிருத்திகளில் ஜனநாயகத்தன்மை பேணப்படுகின்றமை வரவேற்புக்குரியதே!



அபிவிருத்திகளில் ஜனநாயகத்தன்மை 
பேணப்படுகின்றமை வரவேற்புக்குரியதே!
- அரசாங்கம் குறித்து இஸ்மாயில் எம்.பி. புகழாரம்

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் ஜனநாயகத் தன்மை கடைப்பிடிக்கப்படுகின்றமையை பார்க்கையில் மிகவும் மகிழ்வைத் தருகின்றது. இந் நாட்டில் பல்லின சமூகம் வாழ்கின்ற நிலைமையில் அனைவருக்கும் சமமனான அபிவிருத்திகளை அரசாங்கம் வழங்குகின்றதென்றால் அவை மிகையாகாது. - என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.


அண்மையிலுள்ள சிறந்த பாடசாலைகள் வேலைத்திட்டத்தின் கீழ் (05) இறக்கமாம், வாங்காமம் பிரதேசங்களிலுள்ள இரு பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிக் கட்டிடங்களை திறந்து வைத்த பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1950, 60 களில் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்த நாங்கள் இன்று நமக்கு முன்மாதிரியாக அவர்களைப் பார்ப்பது பொருளாதார ரீதியாக நம் அனைவரினதும் சிந்தனைகளில் போட்டு அலச வேண்டியதொன்றாகும். 

அந்த அடிப்படையில் இன்று அரச அதிகாரிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் கேள்விக்குட்படுத்தப்பட்ட நிலையில் பயந்து ஒடுங்கி வாழக்கூடிய நிலைமை தோற்றம் பெற்றுள்ளது. இந் நிலைமையிலிருந்து நாம் விடுபட வேண்டுமானால் கல்வியும், ஒழுக்கமுமே சிறந்த ஆயுதமாக இருக்கின்றது.

இலங்கையிலுள்ள பல்வேறு பாடசாலைகளில் பல கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன. கல்வியென்பது இன்றைய நூற்றாண்டில் மிகவும் இன்றியமைததாகும். மாணவர்களாகிய எமது செல்வங்கள் அரசாங்கத்தில் வழங்கப்படும் சலுகைகளை அனுபவித்து சிறந்த கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வது இக் காலத்தின் தேவையாகும்.

மேலும், இறக்காமம் பிரதேசத்தில் இன்றைய தினம் மேலதிகமாக 3 பாடசாலைகளுக்கு விஜயம் செய்யும் சந்தர்ப்பம் கிட்டியது. அந்த அடிப்படையில் அங்கு என்னிடம் வழங்கப்பட்ட சில கோரிக்கைகள் உள்ளன. அவற்றை நான் கரிசனையாக உள்வாங்கியுள்ள நிலையில் என்னால் முடியுமானவரை இறக்காமம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவேன் - என்றார்.

(ஊடகப் பிரிவு)




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe