4 கோடியே 25 இலட்சம் ரூபா செலவில் சம்மாந்துறை- வளத்தாப்பிட்டி, மோராவில் ஆற்றுக்கு குறுக்காக கள்ளியம்பத்தை இறக்க பாலம் நிர்மாணம்.
கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய உள்ளக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 4 கோடியே 25 இலட்சம் ரூபா செலவில் சம்மாந்துறை- வளத்தாப்பிட்டி, மோராவில் ஆற்றுக்கு குறுக்காக கள்ளியம்பத்தை இறக்க பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் அயராத முயற்சியின் பலனாக இப்பிரதேச விவசாயிகளின் மிக நீண்டகாலத் தேவையாக இருந்த இப்பாலத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு கள்ளியம்பத்தை விவசாய கண்ட குழுத்தலைவர் ஏ.எம்.ஏ. காதர் தலைமையில் இன்று (07) இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இப்பாலத்திற்கான அடிக்கல்லினை நட்டு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
இப்பாலமானது 27 மீற்றர் நீளமும், 6 மீற்றர் அகலமும் கொண்டது. புதிய வளத்தப்பிட்டி, மல்வத்தை, இஸ்மாயில்புரம், மல்லிகைத்தீவு போன்ற கிராமங்களிலிருந்து இறக்காமம் கிராமத்திற்கு விவசாயிகளும், பொதுமக்களும் மிக இலகுவாக இப்பாலத்தின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளலாம்.
மேலும், மோறாவில் பிரிவிலுள்ள கள்ளியம்பத்தை, வட செலியா, தொட்டம், ஹிஜ்ரா கண்டத்திலுள்ள விவசாயிகள் 5000ற்கும் மேற்பட்ட விவசாயிகள் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.
ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் முயற்சியினால் சுமார் 13 கோடி ரூபா செலவில் சம்மாந்துறை பிரதேசத்தில் பட்டம்பிட்டி- மல்கம்பிட்டி பாலம், முஸ்டாக அலி இறக்கத்திற்கபன பாலம், மோறாவில் ஆற்றுக்கு குறுக்கான உடையாண்ட கட்டுப் பாலம், மல்வத்தை மாவடி இறக்கத்திற்கான பாலம் ஆகியன நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், கைகாட்டி பாலம் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு, இன்னும் 3 பாலங்களும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
-மன்சூர் எம்பியின் ஊடகப் பிரிவு