(எம்.எம்.ஜபீர்)
சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையும், பரிசோதனையும் இன்று சவளக்கடை பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.
சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி றம்சீன் பக்கீர் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையில் அம்பாரை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.மாரப்பன கலந்து கொண்டு அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.