தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் உயிரியல் பிரிவின் துறைத் தலைவியாக சுஜா றாஜினி நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு ஆய்வுகூட பயிற்றுனராக இணைந்துக் கொண்ட இவர், 1999ஆம் ஆண்டு முதல் விரிவுரையாளராக பதவியேற்று இன்று வரை செயற்பட்டு வருகிறார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விஷேட தரம் வரை கல்விகற்ற இவர், தனது கலாநிதிப் பட்டத்தையும் அதே பல்கலைக்கழகத்திலேயே பூர்த்தி செய்திருந்தார்.
ஆசிரியர் தம்பிராசா வரதராசனை துணைவராக கரம்பிடித்த இவருக்கு கிர்சனா மற்றும் விதுர்சனா ஆகிய இரு குழந்தைகள் உள்ளன. பல்வேறு சமூக சேவை செயற்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றிவரும் இவர் பட்டிருப்பு மத்தியஸ்த்த சபைத் தவிசாளராகவும், மாதர் சங்க செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.