Ads Area

முஸ்லிம் அரசியல் தலைவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது - விமல்.

"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளதால் அவர்களின் இரட்டை வேடம் இன்று அம்பலமாகியுள்ளது." என  மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:- 

"முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பதவி ஆசை பிடித்து அலைகின்றார்கள். அதற்காக ரணிலின் வாலைப் பிடித்துக்கொண்டு திரிகின்றார்கள். மக்கள் நலன் தொடர்பில் இவர்களுக்கு சிறிதளவேனும் அக்கறையில்லை. எனவே, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இவர்களுக்கு முஸ்லிம் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

நன்றி - வீரகேசரி
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe