இன்று ஆரம்பமான க.பொத.உயர்தர பரீட்சையின் போது கம்பஹா மாவட்டத்தில் உள்ள பூகொட பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மாணவிகள் கிரிந்திவெல்லில் உள்ள கிரிந்திவெல சிங்கள பாடசாலையில் பரீட்சை எழுத சென்ற போது அங்கு கடமையில் இருந்த பரீட்சை பரிசோதகர்கள் பர்தாவை கழற்றி விட்டு பரீட்சை மண்டபத்திற்குல் வரும்படியும் அதன் பின்னரே மாணவிகளை பரீட்சை எழுத அனுமதித்ததாகவும் அங்குள்ள மாணவிகளின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
நிட்டம்புவ (சங்கபோதி கல்லூரி)
குமாரிமுல்ல
ரன்பொகுனுகம
கம்பளை (விக்ரமபாகு வித்தியாலயம்)
மாவத்தகம
பகுதி பாடசாலைகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் கூட்டாக இணைந்து சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படுமென சட்டத்தரணி சறூக் தெரிவித்துள்ளார்.
Thanks - Almashoora Breaking News and Ashraff A Samad