Ads Area

சவுதியில் இருந்து ஒருவர் பைனல் எக்சிட் (Final Exit) சென்றால் அவர் மீண்டும் புதிய விசாவில் உடனே வரலாம்.

சவுதியில் இருந்து ஒருவர் பைனல் எக்சிட் (Final Exit) சென்றால் அவர் மீண்டும் புதிய விசாவில் உடனே வரலாம் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

இது விடையத்தில் மேலும் தெரிய வருவதாவது, 

சவுதியில் இருந்து ஒருவர் பைனல் எக்சிட் (Final Exit) சென்றால் அவர் மீண்டும் சவுதிக்கு உடனே வர முடியாது அவ்வாறு வருவதானால் 3 வருடங்களுக்குப் பின்னர்தான் வர முடியும் என சமூக வலையத்தளங்களில் அண்மைக் காலமாக வதந்தி பரப்பப்பட்டு வருகின்றது இந்த வதந்தி தொடர்பாக விளக்கமளிக்கும் போதே சவுதி அரேபியா மேற் கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

சவுதியில் இருந்து ஒருவர் பைனல் எக்சிட் (Final Exit) சென்றால் அவர் புதிய விசாவில் எந்த நேரமும் சவுதிக்கு வரலாம் ஆனால் அவர் மீது எந்தவித குற்றப்பதிவுகளும் இருத்தல் கூடாது என்பதையும் சவுதி அரேபியா அரசு சுட்டிக் காட்டியுள்ளது.

செய்தி மூலம் - saudigazette
தமிழில் - மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe